மலைகள் நிறைந்த பாதையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்கிறார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்கிறார். ஆனால் வாகனத்தில் செல்பவர் லிப்ட் கொடுக்கவில்லை. இதையடுத்து சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் அதே நபர் அங்கே நிற்கிறார். அவர் மீண்டும் லிப்ட் கேட்கிறார். அப்போதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர் லிப்ட் கொடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் சிறிது தூரம் சென்ற பிறகு அவர் மீண்டும் லிப்ட் கேட்கிறார்.
View this post on Instagram
அதன் பின் அவர் அங்கிருந்து காணாமல் போகிறார். இதனை பார்த்த இரு சக்கரத்தில் சென்ற வாலிபர் திரும்பி பார்த்தபோது அந்த வாலிபர் அங்கு இல்லை. ஆனால் அவர் வாகனத்தின் முன்பு நின்று பயமுறுத்துகிறார். இதனால் பயந்துபோன அவர் மீண்டும் தனது வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
