ஆன்லைனில் வந்த திருமண வரனால் அரங்கேற இருந்த மோசடி சம்பவம் குறித்து இளைஞர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பெரியவர்களால் வரன் பார்க்கப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டு நடைபெறும் நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய நவீன உலகத்தில் பெரியவர்களால்  நிச்சயிக்கப்படும் திருமணமே, இணையத்தின் மூலம்  வரன் தேடி பின் விசாரித்து நடைபெறும் நிகழ்வாக மாறிப் போயிருக்கிறது. இம்மாதிரியான நிகழ்வுகள் மூலம்  பல இன்னல்களையும் பல மோசடி சம்பவங்களையும் சிலர் சந்திக்கவும் நேரிடுகின்றனர்.  அந்த வகையில,

மேட்ரிமோனிகளில் வரன் தேடிய  நபர் ஒருவர் நூலிழையில் மோசடி சம்பவத்திலிருந்து தப்பியுள்ளார். அதை  அவர் வீடியோவாகவும் பதிவு செய்து  இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவருக்கு வரனாக  அமைந்த பெண் கனடாவில் மருத்துவராக பணிபுரிவதாகவும் இளைஞரை நேரில் சந்திக்க இந்தியா வருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து இளைஞரை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர்  தான் டெல்லி விமான நிலையத்தில் இருக்கிறேன். நேரில் திருமணம் பேசி முடிவு செய்த பின், ரூபாய் இரண்டு கோடி மதிப்பிலான கனடா பணத்தை இன்பதிர்ச்சியாக பரிசளிப்பதற்காக கனடாவில் இருந்து கொண்டு வந்தேன்.

இந்தியாவின் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டேன். அதை மீட்பதற்கு ரூ 65 ஆயிரம் கொடுத்தால் அதை மீட்டு விடலாம். எனவே உடனடியாக ரூ 65 ஆயிரம் குறிப்பிட்ட  வங்கி கணக்கிற்கு செலுத்தினால், ரூ 2 கோடியை மீட்டு விடலாம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லி சுங்க அலுவலகத்தில்  தன்னுடைய நண்பர் அதிகாரியாக பணிபுரிகிறார். நான் அவரிடம் எடுத்துச் சொல்லி தங்களை காப்பாற்ற முயல்கிறேன்.

இல்லாத பட்சத்தில் அவர் மூலம் பணம் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்க, டெல்லி விமான நிலையத்தில் எங்கே உள்ளீர்கள் ? என கேட்கும் போதே அழைப்பை துண்டித்து விட்டு சென்றவர் மீண்டும் அழைப்பை மேற்கொள்ளவில்லை.  இந்த வீடியோ வைரலாகவே ஆன்லைனில் வரன் தேடும் நபர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.