செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா…..  ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு  ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும் பாதுகாப்புண்ணா…  எப்படி ஒரு திருடனை பிடிக்க முடியும் ? எப்படி ரவுடியை பிடிக்க முடியும் ? எப்படி தப்பு செய்யுறவன புடிக்க முடியும் ?

முழுக்க முழுக்க அரசு இயந்திரம் பார்த்தீங்கன்னா…  ரெண்டு விஷயத்துக்கு பயன்படுகிறது. ஒன்னு எதிர் காட்சிகளை ஒடுக்கணும். இன்னொரு பார்த்தீங்கன்னா… பந்தோபஸ்த் என்ற பெயரில்  போற ரூட் எல்லாம் கான்வாய் போட்டு, போலீசை நிறுத்தி வச்சி இருக்கு. இந்த மாதிரி இருந்தா…  எப்படி காவலர்கள் வேலை செய்ய முடியும்.  காவலர்கள் சுதந்திரமா வேலை செய்ய முடியாது. விளைவுகளை தான் சந்திக்கணும். தமிழ்நாட்டுல பாத்தீங்கன்னா….

சட்டம் –  ஒழுங்கு மிக மிக சீர்குலைவா இருக்கு. 1ஆம் தேதியிலிருந்து 10ஆம்  தேதிக்குள்ள பார்த்தீங்கன்னா….   25 கொலைகள் நடந்திருக்கு. நம்ம அதிகாரபூர்வ Newsஜெல பாருங்க.  25 கொலை நடந்திருக்கு. அது மட்டும் இல்லாம கொலை முயற்சி 10 நடந்திருக்கு. நம்முடைய காவல்துறை மாதிரி உலகத்துலயே கிடையாது.

ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக சொல்ல கூடிய அளவுக்கு இருந்த காவல்துறை… இன்னைக்கு ஏன் கூனிக்குறுகி போய் நிக்குது. அவுங்களை  வேலை வாங்கணும். ஆனால் என்ன வேலை வாங்குறாங்க ? காவல்துறையை விட்டு எதிர்க்கட்சியை பழிவாங்கறது. இவனுக்கு பாதுகாப்பு. இந்த அடிப்படையில் இருந்தா  எப்படி சட்ட ஒழுங்கை  நிலை நாட்ட முடியும் ? சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற…ஒரு கேலிக்கூத்தாக… மக்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான்  தமிழ்நாட்டிலேயே இருக்கிறது.