கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை 10 நாட்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது.

இதற்காக சென்னை, கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள் குவிந்தனர். அந்த வாலிபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதனையடுத்து உடல் தகுதி தேர்வுக்காக வாலிபர்கள் அண்ணா விளையாட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட திருவண்ணாமலையை செரண்ட 2 வாலிபர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இரண்டு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை ஆறு மணி வரை தேர்வு நடந்துள்ளது. இரண்டாவது நாளாக நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கி இன்று காலை 6 மணி வரை தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.