
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் அண்ணாமலையை நேர்ல பார்த்ததில்லை….. அண்ணாமலை அவர்கள், ஒரு ஐ.பி.எஸ் படிச்சவங்க. பெரிய படிப்பு படிச்சிருக்காங்க. இந்த வட்டத்துக்குள்ள எல்லாம் வர்ல. அரசியலுக்கு வந்திருக்காங்க. அவங்க அரசியல் எப்படி இருக்குன்னா…? வெளியில இருந்து நான் பார்க்கிறேன், ஒரு மன்சூர் அலி கானா இல்ல.. ஈஸியாருக்கு போவோம், அந்த பக்கம் போகும் போது எல்லாருமே பார்த்திருப்பீங்க…
பனையூர் என்கின்ற ஏரியா முஸ்லீம் இருக்குற ஏரியா.. எங்க முஸ்லீம் இருக்கோ அங்க வந்து தங்குறாரு. வாடகைக்கு வீடு எடுத்து…பெரிய ஆளு…அங்க வீட்டு முன்னாடி மிகப்பெரிய கம்பம் நடுராறு. ஹைவேஸ்ல எந்த உத்தரவும் வாங்கல. நான் வெளியில பார்க்குறேன்….பார்த்ததை வைச்சி பேசுறேன்…. இவர் ஏன் அப்படி செய்யணும்? குதர்க்கம் பண்ணனும், ஒரு மத கலவரத்தை உண்டு பண்ணனும், மக்கள பிளக்கணும்.
இதுவே அவங்க தலையாயதாக இருக்கு. இந்த மாதிரி அரசியல்னா.. தமிழ்நாட்டை சீர் குலைக்கணும்…. மதவெறி காடாக்கணும் எப்படி குஜராத்ல பண்ணாங்களோ…. எப்படி புல்வாமாவில் இவங்களே பண்ணிட்டு பண்ணாங்களோ…. அதே மாதிரி இந்த கவர்னர் மாளிகையில, பெரிய வேடிக்கையா இருக்கு. யாரோ ஒரு ரவுடிய வெளியில கொண்டு வராங்க….
அவர் ஒரு பிஸ்லரி பாட்டில்ல பெட்ரோல ஊத்திட்டு போய், அப்படி வைக்கிறாரு, தூக்குறாரு. உடனே பிடிச்சுட்டு கேட்டு உடைஞ்சிடுச்சு, மண்டை உடைஞ்சுருச்சு, கவர்னர் மாளிகை இடிஞ்சிருச்சு, நார்த் இந்தியால அடுத்த நிமிஷம்…. இப்படி ஒரு கலவரத்தை உண்டு பண்ண இருக்காங்க. அதுதான், ரொம்ப மன வருத்தப்பட்டு ஏன் இப்படி செய்யறாங்க ? எல்லாரும். அன்பா இருக்கிறது ஏன் பிடிக்க மாட்டேங்குது? என பேசினார்.