பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு ஆய்வாளர்களும் சென்றிருந்தனர்.

அப்போது மணல் குவாரியில் பல லாரிகள் வரிசையாக மணலுடன் நின்றுகொண்டிருந்தது. பெண் அதிகாரி வந்ததை பார்த்த சட்டவிரோத கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் பெண் அதிகாரியை தரதரவென இழுத்து சென்றும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்து உள்ளார்.

இக்காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய வழக்கில் 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்களையும் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.