நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உள்ளிட்ட  5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது.

பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடலுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இமாச்சலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு தேர்தலில் இதனை அமல்படுத்துவோம் என அளித்த வாக்குறுதியை, சுக்விந்தர் சிங் சுக் அரசு நேற்று அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் 1.36 லட்சம் இமாச்சல் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.