தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் விஐபி தரிசனம் சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு சாமானிய பக்தர்களுக்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் ஏப்..20 முதல் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏப்., 20, 21, 24, 25 தேதிகளில் ரூபாய் 300க்கான தரிசன  டிக்கெட்டை www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் விடுமுறை நாட்கள் என்பதால், தரிசனத்திற்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.