செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு குட்டி அமைச்சர் ஒன்னு வந்திருக்கார். ரெட் ஜெயண்ட்ல ஒரு மூவிஸ் எடுத்திருக்கார். அது எப்படி ஓடுது ? நீங்களே கேக்குறீங்க….  மாமன்னன் படம் எப்படி இருக்குதுன்னு கேக்குறீங்க?  நாட்டுல விலைவாசி ஏறி போச்சு. இதை கேளுங்க. மாமன்னன் படம் ஓடுனா என்ன ? இருந்தா என்ன ? இதா  நாட்டு மக்களுக்கு தேவை, இதா வயிற்று பசிய போக்கபோது.

இன்னும் நிறைய விமர்சனம் வேற. மாமன்னன் படத்துல ஒரு வேதனைக்குரிய விஷயம். இந்த ஊடகம் பத்திரிக்கை நிறைய போடுறாங்க. பெருசு பெருசா போடுறாங்க…. இப்பொழுது இந்த ஊடகத்தின் வாயிலாக பத்திரிகையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்… என்னமோ இவால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திரைப்படத்தின் மூலமாக பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதாக தோற்றத்தை ஏற்படுத்துறாங்க, உண்மையா ? அது பொய்.

நான் முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முதலாக மேதகு ஆளுநர் உத்தரவின் படி,  எங்களுடைய அன்றைய சட்டப்பேரவை தலைவர் அண்ணன் தனபால் அவர்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தை கூட்டினார். இன்னைக்கு பெரும்பான்மையே நிரூபிக்கணும்னு…

அப்போ நிரூபிக்கின்ற பொழுது,  அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அண்ணன் தனபால் அவர்கள்.. அவர் இருக்கையில் இருந்து இழுத்து, கீழத்தள்ளி, மைக் உடைச்சு,பெஞ்ச உடைச்சி   பெரும் ரகளையில் ஈடுபட்டு…  அவருடைய புனிதமான இருக்கையில் அமர்ந்த கட்சி தான் திமுக கட்சி மறந்து விடாதீங்க என தெரிவித்தார்.