மேட்டுப்பாளையம் அருகில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முள்ளிப் பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மக்னா யானையானது மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதாவது, கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் யானையை காரமடை அருளில் உள்ள முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் அதை லாரியில் கொண்டுவந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த வெள்ளியங்காடு ஊர்மக்கள் லாரியை சிறைப்பிடித்து யானையை திருப்பி கொண்டு செல்ல வலியுறுத்தினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் ஊர்மக்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி யானையை போலீஸ் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு கொன்டு சென்றனர்.