
தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வின் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இதற்கென முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை வந்தார். முதலில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் மதுரையில் கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “மக்கள் அரசை தேடி போன காலம் மாறிவிட்டது. இப்போது மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள் பிரச்சனை தீர்க்க தமிழக அரசு கொள்கை வகுத்துள்ளது. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தயாரித்து தாக்கல் செய்யப்பட உள்ளோம். சிறு, குறு தொழில் நிறுவன வளர்ச்சிக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலிப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.