சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதாவது கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் நடப்பு ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை வைத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மும்பை போன்ற மாநிலங்களில் இத்திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் விமர்சித்துள்ளன.