தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் துவங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இப்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது. இந்தி எதிர்ப்பு எனும் பெயரில் வடமாநில மக்களை ஏளனமாக பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவு தான் காரணம்.

திமுக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ஏதோ ஒரு பிரிவின் மீது வெறுப்பை விதைத்து வந்திருக்கின்றனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த 2 வருடங்களில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பேச்சுக்கள் ஏளனப்படுத்துவதாக இருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருபிரிவினர் இடையே மோதலை தூண்டியதாகவும், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்புதல் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.