இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதாவது வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது நாய்களை உரிமையாளர் கையில் பிடித்திருப்பதோடு மசூல் என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் வாயில் கட்டியிருக்க வேண்டும். அதன் பிறகு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி யாராவது தெருவில் வளர்ப்பு நாய்களை சுற்றி திரிய விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது மக்களுக்கு வளர்ப்பு நாய்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக 1913 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.