தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித பணிகளையும் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக வதந்தி பரப்புபவர்கள் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பற்றி வதந்திகளை பரப்பிய பீகார் BJP டுவிட்டர் பக்கத்தை முடக்க டுவிட்டர் நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. அதோடு பீகாரில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.