தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் தற்போது “தலைவன் தலைவி” என்ற குடும்ப படத்தை இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, “மற்ற படங்களை எடுப்பது போல் எளிதானதல்ல…. குடும்பப் படத்தை எடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும். கஷ்டப்பட்டு படத்தை எடுக்கும் போது கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாறிவிடும். தற்போது பலரும் குடும்ப படங்களையே விரும்புகிறார்கள். அந்த வகையில் குடும்பஸ்தன், மாமன், லப்பர் பந்து மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற பல குடும்ப படங்களை மக்கள் பெரிதளவில் கொண்டாடினர்.
அதுமட்டுமின்றி நடிகர்களும் அது போன்ற படங்களை தான் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் “கடைக்குட்டி சிங்கம்” வெளியான பிறகு, என்னிடம் “இது போன்ற ஒரு குடும்ப படம் எனக்கு வேண்டும்” என்று கேட்டார். அதன்படி அவர் நடித்த படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. அதேபோல் மற்ற நடிகர்களும் இதேபோன்று ஒரு படம் வேண்டும் என்று என்னிடம் கேட்கும் வகையில் “தலைவன் தலைவி” படம் இருக்கும் என்று கூறினார்.
மேலும் இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையுலகில் வெளியாகயுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
