செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மதுரை,  கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டோம். இந்த முறையும் நிச்சயமாக திமுக தலைமையில் இருக்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்துவோம்.

அந்த அடிப்படையில் தொகுதிகளை கேட்டு பெற்று,  நாங்கள் நிச்சயமா இந்த தொகுதி உட்பட நாங்கள் பணியாற்றுவோம்,  வெற்றி பெறுவோம் என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தினம் பார்த்தீர்கள் என்றால் ?  காவேரி பிரச்சனை மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கு. குறிப்பாக இன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நான் அண்ணாமலையை பார்த்து கேட்க விரும்புவது…  தமிழ்நாட்டில் இவ்வளவு தூரம் நீட்டி முழங்கக் கூடிய அண்ணாமலை,  ஒரு அகில இந்திய கட்சியாக இருக்கக்கூடிய பாஜக….  கர்நாடகத்தில் காவிரியில்   தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று சொல்லி, நீங்களும் உங்களுடைய கூட்டணி கட்சிகளும் சேர்ந்து பந்த் நடத்துகிறீர்களே என்ன நியாயமா ? தமிழ்நாட்டுக்கு நாங்க என்ன பிச்சை கேட்கிறோமா ? நாங்க என்ன சலுகை கேட்கிறோமா ? என தெரிவித்தார்.