ஒரு நபர் தொழில் துவங்க வேண்டுமெனில் அதற்கு மிகப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இது தொழில் துவங்க நினைக்கும் பலருக்கும் சவாலானதாக உள்ளது. எனினும் அதுவே குறைந்த முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை சம்பாதிக்க வழி இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்.

பணம் எடுக்க பயன்படுத்தப்படும் ATM-ஐ வைத்து பணம் சம்பாதிக்கும் முறையானது தற்போது பயனுள்ளதாகவும், பிரபலமாகவும் இருந்து வருகிறது. ATM உரிமையை நீங்கள் பெற வேண்டுமானால், அதற்குரிய ஒப்பந்தத்தை வைத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

உதாரணமாக நீங்கள் SBI-ன் ஏடிஎம் உரிமையை பெற விரும்பினால், இந்தியா ஒன் ஏடிஎம் (அ) டாடா இண்டிகேஷ் (அ) முத்தூட் ATM போன்றவற்றின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிறுவனங்கள் தான் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி மற்றும் ஹெச்டிஎப்சி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளுக்கான ஒப்பந்தங்களை கொண்டுள்ளது.

ATM கேபின் அமைப்பதற்கு அனுமதி பெற விண்ணப்பதாரர்கள் ரூபாய்.2 லட்சம் செக்யூரிட்டி தொகை மற்றும் ரூ.3 லட்சம் ஏடிஎம் கேபினுக்கு டெபாசிட் செய்யவும். ATM கேபின் அமைக்க நீங்கள் மொத்தம் சுமார் ரூ.5 லட்சம் செலுத்தவேண்டும். எனினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். பணப் பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் ரூபாய்.8 கிடைக்குமாம். அதேபோன்று ஒவ்வொரு பணம் இல்லா பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு 2 ரூபாய் கிடைக்கும்.