ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லேசான காயங்களுடன் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.