லியோ படம் ஆரம்பிக்கும் போது எடுத்த புகைப்படம் போலவே தற்போது மற்றொரு  புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பலரும் எதிர்பார்த்த லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் அவர்களின் கடைசி போர்ஷன் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது அந்த காட்சிகளும் முடிவடைய,  சூட்டிங் முடிந்தது என்ற வரிகளோடு  படக் குழுவினர் பலரும் தொடர்ந்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் லியோ குறித்து பதிவுகளை  பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் எப்படி படம் ஆரம்பிக்கும் போது தனது கையில் இருந்த காப்பை விஜய் அவர்களோட காப்போடு மோதும்படி புகைப்படம் எடுத்திருந்தாரோ, அதேபோல முடிக்கும் தருவாயிலும் அதேபோன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.