சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சிப்காட்டில் மாற்றுத்திறனாளியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது உறவினரான ஒரு வாலிபரை டீக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டாரின் நான்கு உறவினர்கள் அரிவாளுடன் வந்து டீக்கடையை சூறையாடியுள்ளனர். அதில் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து புஷ்பராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.