
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “லியோ” படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பல உச்சநட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக நடந்து வருகிறது.
அனிருத் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் தன் காட்சிகளின் படப்பிடிப்பை நிறைவு செய்து உள்ளதாக அண்மையில் பகிர்ந்திருந்தார். தற்போது அவரை தொடர்ந்து இப்படத்தில் கலந்துகொண்டிருக்கும் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களும் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் புது தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.