லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து உள்ளதாக படக்குழு அறிவித்தனர். இந்த நிலையில் தளபதி விஜய் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.