கன்னட நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சேத்தன்குமார் தன் டுவிட்டர் பதிவில் இந்துத்துவா குறித்து சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதன்படி சேத்தன்குமாரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
அவர் வெளியிட்ட டுவிட் பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ராவணனை வீழ்த்தி ராமன் அயோத்தியா திரும்பியதிலிருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற சாவர்கரின் கருத்து ஒரு பொய். இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த இயலும். சமத்துவம் என்பதே உண்மை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சர்ச்சையாக பதிவிட்டதற்கு எதிரான புகாரின் படி அவர் கைது செய்யப்பட்டார்.
