தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, ஏய், குத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா, திருப்பாச்சி, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கோட்டா சீனிவாசராவ் உடல்நலம் குறித்து தெலுங்கு இணையதளங்களில் போலி தகவல்கள் பரவியது. இது ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தன்னுடைய உடல் நலம் குறித்து கோட்டா சீனிவாசராவ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் நலமாகவும் உயிருடனும் இருக்கிறேன்.
என்னுடைய உடல் நலம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்புகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். என்னுடைய உடல் நலம் குறித்து பரவிய தகவல்களை நம்பி 50-க்கும் மேற்பட்டோர் எனக்கு போன் போட்டு விசாரித்தனர். போலீசாரும் என்னுடைய வீட்டுக்கு வந்தனர். பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கிறது. இது போன்ற பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.