லிவ் இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள், லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மம்தா ராணி vs மத்திய அரசு எனும் வழக்கில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அதனை சட்டப்பதிவு செய்வதற்குரிய வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. லிவ்-இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற பெரிய குற்றங்கள் உட்பட பல பெரிய அளவிலான குற்றங்கள் நடைபெறுவதாக மனுதாரர் கவலை தெரிவித்தார்.