புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நேற்று பிப்,.28 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அமைச்சர், எம்.பி, சட்டமன்ற உறுப்பினரை விட தகுதி குறைவானவரை அழைத்து பட்டங்களை வழங்குவதா?.. என துணை வேந்தர் குர்மீத் சிங்குடன் வாக்குவாதம் நடந்தது.

இதற்கிடையில் விழாவில் திடீரென ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது எழுந்திருந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஜிப்மர் இயக்குனர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்குடன் மேடையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.