மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் , கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடையில் தண்ணீர் கேன் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வாங்கிய தண்ணீர் கேனில்  தவளை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மளிகைக் கடையை ஆய்வு செய்ததில், தண்ணீர் நிரப்புதல் மற்றும் காலாவதி தேதி போன்ற அத்தியாவசிய தகவல்கள் இல்லாதது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காக மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி முத்திரைகள் இல்லாதது தெரியவந்தது. பின் மேற்கொண்ட விரிவான விசாரணையில்,

காலி டப்பாக்களில் தவளைகள், நத்தைகள் மற்றும் மரங்கொத்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, தரக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம் குறித்த குறைபாடுகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்ப உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.