அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  நாங்க எந்த கூட்டணியிலும்…  யாரையும் முறிச்சிக்கிட்டு…  யாரையும் போய் சந்திக்கணும்னு அவசியம் இல்ல. எங்களோடு உள்ள நல்ல உள்ளங்கள் என்றைக்கு எங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. வருகின்ற பாராளுமன்ற தேர்தல்ல…  ஒரு சிறப்பான செயல்பாட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செய்யும்.

மத்தியில ஆளுகின்ற பிரதமரை தேர்ந்தெடுப்பதிலேயே அணிலை போன்று ஒரு சிறப்பான பணியை அம்மா  மக்கள் முன்னேற்றக் கழகம் செய்யும் என ஏற்கனவே சொல்லி இருக்கேன். அதை தான் திரும்பவும் சொல்றேன். பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தான் பிரதமரை வேட்பாளரை கொடுக்கக் கூடியவர்கள். அந்த கூட்டணியிலும் இருக்கலாம். தனித்தும் போட்டியிடலாம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் யாரையும் நம்பி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அல்ல.  இது தொண்டர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.  தமிழ்நாடு முழுவதும் லட்சோப லட்சம் தொண்டர்கள் எங்களோடு சபதம் ஏற்று பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய வெற்றியை அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை. நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து தான் போட்டியிடுவதா ?  என்பதை முடிவு செய்யணும் என தெரிவித்தார்.