
லியோ திரைப்படம் குறித்து கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை மாதம் இறுதி வாரத்தை எட்டிய நிலையில், அடுத்ததாக ஆகஸ்ட் செப்டம்பர் என வரக்கூடிய மாதங்களில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இருப்பினும், கோலிவுட் மட்டுமில்லாமல் அனைத்து இந்திய சினிமா துறையிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக லியோ இருக்கிறது.
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம் வசூலில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் லியோ படம் குறித்து நேர்காணல் ஒன்றில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில்,
லியோ திரைப்படம் இந்தியாவே எதிர்பார்க்கும் திரைப்படமாக தற்போது திகழ்ந்து வருகிறது. பட குழுவினர் தற்போது பாதி கிணற்றை தாண்டி விட்டனர். மீதி கிணறான ப்ரமோஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றால், இதுவரை தமிழில் ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனையை எந்த திரைப்படமும் பெறவில்லை. அந்த பெருமையை லியோ திரைப்படம் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
#Leo Might Be The First 1000cr Grossing Movie Of Tamil Cinema – Kanguva Producer #DhananJayan !! pic.twitter.com/YA79RQKbVB
— Siddarthツ🦁 (@TheCulpritVJ) July 21, 2023