நகைச்சுவை நடிகரான ஜாம்பவான் சார்லி சாப்ளின் மகளும் நடிகையுமான ஜோசபின் சாப்ளின் இன்று  காலமானார். இவருக்கு வயது 74.   மார்ச் 28, 1949  கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் பிறந்த ஜோசபின் சாப்ளின், சார்லி சாப்ளின் மற்றும் ஊனா ஓ’நீல் ஆகியோருக்கு பிறந்த 8 குழந்தைகளில் மூன்றாவது குழந்தை. அவர் தனது தந்தையின் 1952 ‘லைம்லைட்’ மூலம் தனது இளம் வயதிலேயே திரையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.