தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சமர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் படங்களுக்கு தமிழ் பெயரையே வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழர்கள் தானே படம் பார்க்கிறார்கள். தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர்களை தான் வைக்க வேண்டும். தளபதி விஜயின் லியோ படக்குழு லியோ என்ற படத்தின் டைட்டிலை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்முடைய தாய் மொழியை நாம் தான் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கிறது. முன்பு தமிழில் பெயர் வைத்தார்கள். ஆனால் தற்போது மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்கள் வருகிறது. மேலும் அதனை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.