தளபதி விஜய் நடிப்பில் வெளியாவுள்ள லியோ திரைப்படத்துடன் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று போட்டியாக களமிறங்கவுள்ளது.

கோலிவுட் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக லியோ தற்போது அமைந்திருக்கிறது. இப்படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, கோலிவுட்-ல்  இத்திரைப்படத்திற்கு போட்டியாக எந்த திரைப்படமும் களமிறங்கவில்லை. மாறாக, இந்திய பிராந்தியத்தின் பிற மொழி படங்களில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவுள்ளன.  லியோ திரைப்படம் பான்  இந்தியா திரைப்படமாக வெளியாக  இருப்பதால்,

லியோவுக்கு போட்டியாக பிற மாநிலங்களில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாக இருப்பது லியோ-க்கு சற்று தொய்வை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லியோவுக்கு போட்டியாக தற்போது ஹாலிவுட் திரைப்படம் ஒன்று அக்டோபர் 20ஆம் தேதி களமிறங்க இருக்கிறது. Killers of the Flower Moon என்ற திரைப்படம் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ஹாலிவுட்-ன்  சிறந்த இயக்குனராக கருதப்படும் மார்ட்டின் ஸ்கோர்செஸி இப்படத்தை இயக்கியுள்ளார்.

அதேபோல் ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் லியனார்டோ டிகாப்ரியோ இப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான the wolf of the wall street உலக அளவில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியாக உள்ளதால், இதன் மீது அதிக எதிர்பார்ப்பு என்பது உலக அளவில் உள்ளது. இந்தியாவில் கிறிஸ்டோபர் நோலன் திரைப்படத்திற்கு நிகரான வரவேற்பு என்பது மார்ட்டின் அவர்களின் படத்திற்கும் உண்டு என்பதால் லியோ படத்திற்கான வசூல் இதன் மூலம் கோலிவுட் தவிர்த்து பிற மாநிலங்களில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.