
பஞ்சாப் மாநில அரசு மானியமாக வழங்கும் ரூபாய்.25 லட்சம் பணத்தை பெறுவதற்கு ரூபாய்.5 லட்சம் கேட்டதாக ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ரஷிம் கார்க் என்பவர் கையில் பணத்துடன் வசமாக கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்பட்டது. இதனிடையே ரஷிம் கார்க்குடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமித் ரத்தன் மறுத்து விட்டார். மேலும் பஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த எதிர்க் கட்சிகள் முயல்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.