IPS அதிகாரியான ரூபா தன் சமூகவலைதள பக்கத்தில் IAS அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அன்புமிக்க பத்திரிகையாளர்களே, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக நான் எழுப்பியிருக்கும் ஊழல் புகார்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள். இதனிடையே ஊழலுக்கு எதிராக போராடுகிறவர்கள் யாரையும் நான் தடுக்கவில்லை. தமிழகத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். நானும் என் கணவரும் இன்னும் ஒன்றாகதான் வாழ்கிறோம். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இத்தவறை செய்துகொண்டிருக்கும் குற்றவாளியிடம்(ரோகிணி சிந்தூரி) கேள்வி எழுப்புங்கள். அவரது செயல் பல்வேறு குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுத்துகிறது. இல்லையெனில் மேலும் பல குடும்பங்கள் அழிந்துவிடும்.

நான் வலுவான ஒரு பெண்மணி, அவருக்கு எதிராக போராடுவேன். அவரால் பாதிப்படைந்த பெண்களுக்காக நான் போராடி கொண்டிருக்கிறேன். அனைத்து பெண்களுக்கும் என்னைபோல் போராடும் பலம் இருப்பது இல்லை. அவர்களுக்காக நீங்கள் தான் குரல்கொடுக்க வேண்டும். இந்தியா குடும்ப கலாசாரங்களுக்கு பெயர் பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ரூபா குறிப்பிட்டுள்ளார்.