விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்களம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் செஞ்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை கூடத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சந்தியாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.