மதுரை மாவட்டம் சோழவந்தான் என்ற இடத்தில் வசிப்பவர் ரீகன். இவருடைய மனைவி காயத்ரி என்ற சோபியா (33).  இந்நிலையில் நேற்று காயத்ரி தனது மகனை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு சோழவந்தனை நோக்கி தனது மொபட்டில் வந்துள்ளார். அப்போது அவர் திருமால்நத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, 3 பேர் அவரைப் பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காயத்ரியின் மொபட்டை காலால் மிதித்து கீழே தள்ளியதால், நிலை தடுமாறிய காயத்ரி அருகில் உள்ள முச்செடியின் மீது விழுந்துள்ளார். அதன் பின் அவர் அணிந்திருந்த சுமார் 25 பவுன் தங்கச் சங்கிலியை அந்த திருடர்கள் பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

எனவே இது குறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் காயத்ரி புகார் செய்தார். உடனே இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.