திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பருத்தியூரில் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இருக்கின்றனர். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். கண்ணகி எப்போதும் ஏராளமான நகைகளை அணிந்து இருப்பாராம். நேற்று திருவாரூருக்கு ஒரு வேலையாக சென்ற நாராயணசாமி மாலை வீட்டிற்கு வந்து தனது மனைவியை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. இதனால் வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்துள்ளார்.

அப்போது கழுத்தறுக்கப்பட்ட ரத்த வெள்ளத்தில் கண்ணகி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு நாராயணசாமி கூச்சிலிட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கண்ணகியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கண்ணகி எப்போதுமே நிறைய நகைகளை அணிந்திருப்பாராம். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் கண்ணகியை கொலை செய்து சுமார் 30 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடியதாக தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.