சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை போலீசார் கொரட்டூர் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மத்திய அவென்யூ பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருக்கும் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து வாடகைக்கு வீட்டை எடுத்து விபச்சாரம் நடத்தி வந்த ஷீஜா (42) என்ற பெண்ணை போலீசார் கைது செய்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம் பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.