திருச்சி மாவட்டத்தில் உள்ள பேச்சக்காம்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குரும்பப்பட்டியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு துரைசாமி தண்ணீர் தெளித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று துரைசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.