நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

போலி ஆப் பதிவிறக்கம் மூலம் கேஒய்சி ஊழல் நடைபெறுவது குறித்து SBI கூறுவதாவது, கேஒய்சி புதுப்பித்தல் என்ற பெயரில் மோசடியாளர்கள் மக்களுக்கு மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புகின்றனர். பின் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என கூறி ஒரு அவசர உணர்வை உருவாக்குகின்றனர். கணக்கு முடக்கப்படும் என்ற அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் ஏபிகே ஃபைலை பதிவிறக்கம் செய்ய அது மோசடிக்காரர்களின்  இணையதளத்திற்கு செல்கிறது. பாதிக்கப்பட்டவரின் மொபைலில்  அந்த ஏபிகே ஃபைல் பதிவிறக்கம் செய்யப்பட்டதும், அந்த ஆப் பின்வருவனவற்றுள் நுழைவதற்கான அனுமதியை வேண்டுகிறது. அதன்படி, மெசேஜ்கள் மற்றும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், தொடர்பு நபர்கள் பட்டியல், பிற தனிப்பட்ட தகவல்கள் 

போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை அந்த போலி ஆப் கேட்கிறது. மேலும் ஆதார் ஐடி எண் மற்றும் கடவுச்சொல், ஓடிபி ஆகியவற்றை  தீங்கிழைக்கும் அந்த ஆப் உண்மையான ஆப்பை போலவே தோற்றமளிப்பதால் பாதிக்கப்பட்ட அந்த நபர் விபரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து விடுகிறார் மற்றும் இத்தகைய மோசடிகளுக்கு பலியாகி விடுகிறார். எப்போதுமே வங்கியில் ஆப்களை ஆப் ஸ்டோர் & பிளே ஸ்டோர் ஆகிய நம்பகமான அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிறக்கம் செய்து அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பின்னர் அதை பயன்படுத்துமாறு SBI அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf