நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

குறைந்த அல்லது நடுத்தர வருமான குழுக்களில் உள்ள பின்வரும் மக்களை மோசடியாளர்கள் தங்களது இலக்காக எடுத்துக் கொள்கின்றனர். அந்தவகையில், 

பணத்தேவை அதிகம் உள்ளவர்கள், தொழில்நுட்பம் குறித்து நன்கு அறியாதவர்கள்,  குறைவான கிரெடிட் ஸ்கோர்கள்(வங்கிகளில் கடன் வாங்க தேவையான ஒன்று), மோசமான நிதிநிலைமை கொண்டவர்கள், பெரும் கடன் சுமை கொண்டவர்கள் என மேற்கண்ட சூழ்நிலை  கொண்ட நபர்களை அணுகி அவர்களது சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், அவர்களுக்கு கடனாக சிறிய தொகைகள் வழங்கப்படுகின்றன. (10,000-30,000)

இப்படி கடன் வழங்கும் ஆப்பினை டவுன்லோடு செய்த பிறகு மொபைல் எண்,  ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற ரகசிய விவரங்களை கேட்கின்றன. ஒவ்வொரு விண்ணப்பத்தை நிரப்பும் படி பயனர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.  மேலும் இந்த ஆப்-ல்  மைக்ரோஃபோன், போட்டோ கேலரி, மின்னஞ்சல் மற்றும் தொடர் பதிவுகள் ஆகியவற்றை அணுகுவதற்கான உரிமையும் கேட்கின்றன. பாதிக்கப்பட்டவரின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதையடுத்து  APP -ல்  கடன் வாங்கிய நபர் அந்த கடனை அடைப்பதற்கு தாமதம் செய்தாலோ அல்லது கட்ட தவறினாலோ அந்த நபரின் ரகசிய தகவல் தரவுகளை வெளியிடுவோம் என்று அந்த ஆப்-ஐ  இயக்குபவர் அவரை மிரட்டுகிறார். எந்த ஒரு ரகசிய தகவலையும் அளிப்பதற்கு முன்பாக அந்த லோன் ஆப்பிள் ஏதேனும் வங்கி அல்லது என்பிஎன்பிஎஸ்சி யுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்போதும் சோதியுங்கள் என SBI அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf