செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில்  என்ன நடக்குது? இப்படியே சண்டை போட்டுட்டு இருக்கிறதை விட, உட்க்காந்து பேசலாம். இன்னைக்கு கூட சொல்றேங்க….  மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தால், நாங்கள் வறோம்…  கவர்னர் உக்காந்து பேசுவோம். என்ன பிரச்சனை? என்ன என்ன சந்தேகங்கள் அதை நாங்கள் தீர்க்கிறோம். நீங்கள் எங்களுக்கு பாஸ் பண்ணி குடுங்கனு சொல்றதுல, எந்த தப்பும் இல்ல. மக்கள் மீது அக்கறை இருந்தால்.. அதை  தான் நான் சொல்றேன்.

மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை, பாராட்டுவதற்கு மனசு வந்தது. ஆனால் அவங்க வேந்தரா இருக்கணும்னு சொல்லும் போது இவங்க தான் எதிர்த்தாங்க ஒன்று. இன்னொன்றையும் சொல்கிறார்… நாங்கள் வேந்தரா இருந்தா? என்னனா ஒரு  குறிப்பிட்ட நிதி உதவியை செய்றாரு அந்த பல்கலைக்கழகத்திற்கு… ஒரு குறிப்பிட்ட நிதியை அறிவித்துவிட்டு, என்ன சொல்றாருன்னா, நாங்க வேந்தரா இருந்தா?  இப்படிப்பட்ட உதவிகள் எல்லாம் செய்ய  முடியும்  என்றாரு.

இன்னைக்கும் அரசாங்கத்திற்கு அடியில தானே, நமது பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. உயர்கல்விதுறை அமைச்சர் தானே நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். ஆக, உயர்கல்வித்துறை அமைச்சர் நிர்வகித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது, பல்கலைக்கழகங்கள் உங்ககிட்ட தானே இருக்குது. அப்போ நான் வேந்தரா இருந்தா மட்டும் தான், நான் உதவி செய்வேன். இல்லன்னா உதவி செய்ய முடியாதுன்னு சொல்றதே முதல் தப்பு என தெரிவித்தார்.