நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

சட்டவிரோத கடன் ஆப்-கள் மோசடி குறித்து SBI கூறியதாவது,  சமீபத்திய ஆண்டுகளில் அதிக வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடு அற்ற டிஜிட்டல் கடன் விண்ணப்பங்களை உள்ளடக்கிய நிதி மோசடிகள் அதிகரித்துள்ளது. சிறிய கடன்களை வழங்கும் ஆப் மூலம் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக மும்பை சைபர் குற்ற பிரிவில் 2021 ஆம் ஆண்டில் 928 ஆக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 3471 ஆக பெருக்கியுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இது போன்ற செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க கோரி SBI வலியுறுத்துகிறது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf