நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு இடத்திற்கு போக நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமின்றி, குறுகிய பயணங்களும் உள்ளது. அதன்படி விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ரயில், அஸ்ஸாமின் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 4286 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ரயில் சேவையை வழங்குகிறது.

அதே நேரம் நாக்பூரிலிருந்து அஜ்னி வரை இந்திய ரயில்வேயின் மிக குறுகிய தூர ரயில் சேவை 3 கிலோ மீட்டர் ஆகும். நாக்பூருக்கும் அஜ்னிக்கும் இடையில் 3 கி.மீ. பயண தூரத்திற்கான ரயில்சேவை இயக்கப்படுகிறது. நாக்பூரில் இருந்து அஜ்னி வரையிலான பயணம் வெறும் 9 நிமிடங்களில் நிறைவடைகிறது. இப்பயணத்திற்கு பொது வகுப்பிற்கு 60 ரூபாயும், ஸ்லீப்பர் வகுப்பிற்கு, 175 ரூபாயும் செலுத்தவேண்டும்.