குஜராத் மாநில கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப் படங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற 17ஆம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமரை தொடர்புப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள், அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட அப்படத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி தான் கலவரத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் youtube, twitter லிங்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதற்கு சமூகஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.