கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுமென முதல் வாக்குறுதியை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசியபோது, 2வது வாக்குறுதியாக ஒவ்வொரு மாதமும் குடும்பத்தலைவிகளுக்கு ரூபாய்.2,000 வழங்கப்படும்” என அறிவித்தார்.