ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்த உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து நிகழ்வில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தேன்மொழி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, தாட்கோ மேலாளர் ஏழுமலை மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.