திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  DMK சட்டமன்ற உறுப்பினர் எழிலன், நீட்  வந்தது பிறகு ரிப்பீட்டர்ஸ் தான் உள்ளே நுழைய முடியும்.  98% பேர் ஏதாவது நீட் கோச்சிங் கிளாஸ் போயிட்டு… அங்கு  ஒரு வருஷத்துக்கு 2 லட்சம்…. 3  லட்சம்…. 5 லட்சம் ரூபாய் அவங்க கொடுத்து படிப்பவர்கள் தான் கவர்மெண்ட் மருத்துவ கல்வி நிறுவனத்திற்கு செல்ல முடியும்.

தயாநிதி மாறன் அண்ணன்  சொன்னாரு…. சிபிஎஸ்சி போர்டோ,  ஸ்டேட் போர்டோ  மேட்டர் கிடையாது. யார் யாரெல்லாம் நீட் கோச்சிங் கிளாஸ்ல ஒரு வருஷம்…. ரெண்டு வருஷம்… மூணு வருஷம்… NEET MCQ போட்டுக்கிட்டே இருந்து….  உளவியல் ரீதியாக MCQ  போடும் மிருகமா மாத்துறாங்க.  எஜுகேஷன் சிஸ்டம் காலியாகுது.   பள்ளிக்கல்வித்துறை காலி.. இனிமே எதுக்கு  நான் வந்து பன்னிரண்டாம் வகுப்பு பாடம் படிக்கணும்?  எதுக்கு ஸ்கூல்லடீசரை மதிக்கணும்.

எனக்கு கோச்சிங் சென்டர் தான் இருக்கே…  அங்க போய் உட்கார்ந்துகிறேன் என்று சொல்லி….. 6ஆம் வகுப்பிலே கோச்சிங் சென்டர் போறாங்க. பள்ளி வகுப்பறை பாடம் போயிடுச்சி…  யாரும் புக் எல்லாம் படிப்பதில்லை. MCQ  பர்டன் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கல்வி சிஸ்டம் காலி… அரசு கல்லூரி நிறுவனத்தில் நீட் மூலமாக உள்ளே வருகின்றார்கள் அல்லவா… யாருமே அரசாங்க வேலைக்கு போய் சேர விருப்பப்படுவதில்லை…..  அரசாங்கம் இன்ஸ்டிடியூஷன் காலியாகுது என தெரிவித்தார்.