இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி டிஜிட்டல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை மீண்டும் பதிவு செய்துள்ளது, அதன்படி இப்போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 4.4 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 4.3 கோடி பார்வையாளர்களைப் பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து உலகக் கோப்பை போட்டியின் முந்தைய சாதனையை இந்த இது தற்போது முறியடித்துள்ளது. 

கிரிக்கெட் ஜாம்பவான்  விராட் கோலியின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அவரது 49வது சதத்தின் குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் அற்புதமான வெற்றி,  ஆகியவற்றுடன் டிஜிட்டல் சாதனையையும் படைத்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி, நேற்றைய முன்தினமானது இந்தியாவுக்கான ஒட்டு மொத்த நாளாக மாறிப்போனது.